
சென்னை – தமிழ்த் திரையுலகின் பிரபல முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவரான விக்ரமின் தந்தையார் வினோத் ராஜ் இன்று சென்னையில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.
துணை நடிகராக அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். விஜய் நடித்த ‘கில்லி’ படத்தில் திரிஷாவின் தந்தையாக சிறப்பான நடிப்பை வினோத் ராஜ் வழங்கியிருந்தார்.
அதைத் தொடர்ந்து பல படங்களில் குணசித்திர வேடங்களிலும், தந்தை வேடங்களிலும் அவர் நடித்து வந்தார்.