Home இந்தியா “மரியாதை நிமித்தம் சந்திக்கிறேன்” – கருணாநிதி சந்திப்பு குறித்து ரஜினி

“மரியாதை நிமித்தம் சந்திக்கிறேன்” – கருணாநிதி சந்திப்பு குறித்து ரஜினி

914
0
SHARE
Ad

rajini-politics-announcement-31122017 (10)சென்னை – (மலேசிய நேரம் இரவு 10.25 நிலவரம்) எதிர்பார்க்கப்பட்டபடி இன்று இரவு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியைச் சந்திக்கும் ரஜினிகாந்த், தனது இல்லத்திலிருந்து புறப்படும் முன்னர் குறுக்கிட்ட பத்திரிக்கையாளர்களிடம் “கருணாநிதி எனது நண்பர். அவரை மரியாதை நிமித்தம் சந்திக்கவும், அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கவும், புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கவும் செல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் சென்னை கோபாலபுரத்திலுள்ள கருணாநிதியின் இல்லத்தில் ரஜினி அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

அவரை திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன் நின்று வரவேற்று தனது இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார்.