Home இந்தியா “அரசியல் பிரவேசத்திற்கு ஆசீர்வாதம் பெற்றேன்” கருணாநிதி சந்திப்புக்குப் பின் ரஜினி

“அரசியல் பிரவேசத்திற்கு ஆசீர்வாதம் பெற்றேன்” கருணாநிதி சந்திப்புக்குப் பின் ரஜினி

789
0
SHARE
Ad

rajiniசென்னை – இன்று புதன்கிழமை இரவு கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்தித்த ரஜினிகாந்த், தனது சந்திப்புக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தனது சந்திப்பு குறித்து விளக்கமளித்தார்.

“கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். எனது அரசியல் பிரவேசம் குறித்து கருணாநிதியிடம் ஆசிர்வாதம் பெற்றேன்” என ரஜினி தெரிவித்தார்.

ரஜினியை மு.க.ஸ்டாலின் வாசல் வரை வந்து வழியனுப்பி வந்தார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ரஜினியின் கருணாநிதியுடனான சந்திப்பு அரசியல் பண்பாட்டிற்கு உகந்த வகையிலான சந்திப்பு என்று கூறினார்.

#TamilSchoolmychoice

ரஜினிக்கு அரசியல் ரீதியிலான ஆதரவைத் திமுக தருவது என்பது தேர்தல் காலத்தில் செய்யப்பட வேண்டிய முடிவு என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.