Home நாடு தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் இணையத் தளம் – பிரதமர் தொடக்கினார்

தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் இணையத் தளம் – பிரதமர் தொடக்கினார்

802
0
SHARE
Ad

najib-launch-therakyatகோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை இரவு புத்ரா உலக வாணிப மையத்தில் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள், ஆதரவாளர்கள் முன்னிலையில் பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் சிறப்பு இணையத் தளத்தை பிரதமர் நஜிப் துன் ரசாக் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தனது உரையில் நஜிப், தேசிய முன்னணியின் 14-வது பொதுத் தேர்தலுக்கான அறிக்கை இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கைகளிலேயே சிறப்பானதாக – மக்கள் நலன் சார்ந்ததாக – இருக்கும் எனவும் தெரிவித்தார். எனினும் தற்போது அந்தத் தேர்தல் அறிக்கையின் அம்சங்களை வெளியிட முடியாது என்றும் உரிய நேரத்தில் அது வெளியிடப்படும் என்றும் நஜிப் தெரிவித்தார்.

நஜிப் தொடக்கி வைத்த தேசிய முன்னணியின் பொதுத் தேர்தலுக்கான இணையத் தளம் கீழ்க்காணும் இணைய முகவரியில் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது:

www.therakyat.com

Comments