Home கலை உலகம் “நான் ஐஸ்வர்யா ராய்க்குப் பிறந்தவன்” – உரிமை கோரும் ஆந்திர இளைஞர்!

“நான் ஐஸ்வர்யா ராய்க்குப் பிறந்தவன்” – உரிமை கோரும் ஆந்திர இளைஞர்!

1257
0
SHARE
Ad

Aiswarya Raiவிசாகப்பட்டினம் – ஆந்திராவைச் சேர்ந்த சங்கீத் குமார் என்ற 29 வயதான இளைஞர், தான் ஐஸ்வர்யா ராய்க்கு செயற்கைக் கருத்தருப்பின் மூலம் பிறந்த மகன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

கடந்த 1988-ம் ஆண்டு லண்டனில் செயற்கைக் கருத்தரிப்பின் மூலம், தான் ஐஸ்வர்யா ராய்க்கு மகனாகப் பிறந்ததாகவும், தனது 3 வயது வரை ஐஸ்வர்யாராயின் பெற்றோரான கிருஷ்ணராஜ் ராய் மற்றும் பிரிந்தியா ராய் ஆகிய இருவரும் தன்னை வளர்த்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதன் பின்னர், தனது வளர்ப்புத் தந்தை ஆதித்யா ராய் உடன் தான் ஆந்திராவிற்கு வந்துவிட்டதாகவும், கடந்த 27 வருடங்களாக தனது தாயாரைச் சந்திக்கவிடாமல் தனது குடும்பத்தினர் தடுத்து வருவதாகவும் சங்கீத் குமார் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், ஐஸ்வர்யா தற்போது தனது கணவர் அபிஷேக் பச்சனைப் பிரிந்து வாழ்வதால், தனியாக வாழும் தனது தாயாருடன் சேர்த்து வைக்கும் படியும் சங்கீத் குமார் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.