Home இந்தியா ஆர்.கே.நகர் மக்களை கமல் கேவலப்படுத்துகிறார்: டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் மக்களை கமல் கேவலப்படுத்துகிறார்: டிடிவி தினகரன்

1168
0
SHARE
Ad

TTV dhinakaranசென்னை – ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு மக்கள் வாக்களித்ததாக நடிகர் கமல்ஹாசன், வார இதழ் ஒன்றில் தான் எழுதி வரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அதற்குப் பதிலடி கொடுத்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்றத் தலைவர் டிடிவி.தினகரன், “பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்ததாகக் கூறி நடிகர் கமல், ஆர்.கே.நகர் தொகுதி மக்களைக் கேவலப்படுத்துகிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

“அரசியலில் இறங்க நினைப்பவர் மக்களுக்குச் சேவையாற்றவே வரவேண்டும். அதைவிடுத்து மக்களைக் குற்றம்சாட்டுவது தவறு” என்றும் தினகரன் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், ஜெயலலிதா இறந்த பிறகு அந்த இடத்திற்கு வந்து சடுகுடு ஆட நினைத்த கமல்ஹாசனுக்குத் தாங்கள் வெற்றி பெற்று உண்மையான அதிமுக அணி என்பதை நிரூபித்தது பிடிக்கவில்லை போலும் என்றும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.