Home நாடு இருமொழித் திட்டம் தொடரும் – கல்வியமைச்சு அறிவிப்பு!

இருமொழித் திட்டம் தொடரும் – கல்வியமைச்சு அறிவிப்பு!

1116
0
SHARE
Ad

Minister of Educationகோலாலம்பூர் – இருமொழிப் பாடத்திட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என கல்வியமைச்சு இன்று வியாழக்கிழமை அறிவித்தது.

அடுத்த ஆண்டும், நாடெங்கிலும் உள்ள 1,215 பள்ளிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் இருமொழித்திட்டம் தொடரும் என கல்வியமைச்சு தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

“அமைச்சு தற்போது 2018-ம் ஆண்டில் மேலும் 88 பள்ளிகளுக்கு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இதனையடுத்து மொத்தம் 1,303 பள்ளிகளில் அடுத்த ஆண்டு இருமொழித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” எனக் கல்வியமைச்சு தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும், பள்ளிகளில் இருமொழித்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கல்வியமைச்சு வலியுறுத்தியிருக்கிறது.