Home நாடு கேமரன் மலை மஇகாவுக்கே – பகாங் தேசிய முன்னணி முடிவு

கேமரன் மலை மஇகாவுக்கே – பகாங் தேசிய முன்னணி முடிவு

1010
0
SHARE
Ad

cameron tea plantationகோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் கட்சிகள் பகாங் மாநிலத்தில் அந்தக் கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடும் என பகாங் மாநில தேசிய முன்னணி அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியிலும், பெந்தோங் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் சபாய் சட்டமன்றத் தொகுதியிலும் மஇகாவே மீண்டும் போட்டியிடும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ponggal-mic hq-15012018 (4)
நேற்று திங்கட்கிழமை மாலையில் மஇகா தலைமையகமும் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலமும் இணைந்து நடத்திய பொங்கல் விழாவில்…

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை மாலையில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், “பகாங் மாநில தேசிய முன்னணியின் முடிவை வரவேற்கிறேன். பாரம்பரியமாக கேமரன் மலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்திருப்பதால் இந்தத் தொகுதி எங்களுக்கே என மஇகாவும் ஏற்கனவே வலியுறுத்தி வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் தேசிய முன்னணி இந்த முடிவை எடுத்திருக்கிறது” என்று கூறினார்.

பொதுவாக மாநில தேசிய முன்னணி மேற்கொள்ளும் முடிவைத்தான் தேசிய முன்னணி தலைமைத்துவமும் ஏற்றுக் கொள்ளும். எனினும், தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்கள் யார் என்பது போன்ற இறுதி முடிவுகளை பிரதமர் நஜிப்தான் எடுப்பார்.