Home நாடு “பிரதமராக நானா? நஜிப்பா? – பகிரங்கமாக பாஸ் தெரிவிக்கட்டும்” – மகாதீர்

“பிரதமராக நானா? நஜிப்பா? – பகிரங்கமாக பாஸ் தெரிவிக்கட்டும்” – மகாதீர்

802
0
SHARE
Ad

mahathir-mohamadபெட்டாலிங் ஜெயா – அடுத்த பிரதமராகத் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை பாஸ் கட்சி பகிரங்கமாகத் தெரியப்படுத்த வேண்டும் என துன் மகாதீர் அந்தக் கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.

பாஸ் கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையில் இரகசிய உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக பிரிபூமி பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும் மூத்த பத்திரிக்கையாளருமான காடிர் ஜாசின் குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய மகாதீர், “பிரதமர் வேட்பாளராக யாரை பாஸ் ஆதரிக்கிறது? நஜிப் துன் ரசாக்கையே அல்லது என்னையா? எங்களுக்குத் தெரிய வேண்டும். அவ்வாறு அவர்கள் தெரிவித்தால், அவர்களின் பிரதமர் வேட்பாளரை மக்களும் ஆதரித்தால் பாஸ் கட்சியால் பொதுத் தேர்தலில் வெற்றி பெறமுடியும்” என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice