Home நாடு இம்மாதம் பணிக்குத் திரும்புகிறார் கிட் சியாங் – ஆனால் தேர்தலில் போட்டியிடுவாரா?

இம்மாதம் பணிக்குத் திரும்புகிறார் கிட் சியாங் – ஆனால் தேர்தலில் போட்டியிடுவாரா?

833
0
SHARE
Ad

Lim kit siangகோலாலம்பூர் – புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்து வந்த கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங், ஜனவரி 27-ம் தேதி முதல், மீண்டும் தனது அரசியல் பணிகளுக்குத் திரும்புகிறார்.

இதனை ஜோகூர் ஜசெக தலைவர் லியூ சின் தோங் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

என்றாலும், வரும் 14-வது பொதுத்தேர்தலில் லிம் கிட் சியாங் தனது தொகுதியான கேலாங் பாத்தாவிலோ அல்லது ஆயர் ஹீத்தாமிலோ போட்டியிடுவாரா? என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.

#TamilSchoolmychoice

இதனை லியூவும் உறுதிப்படுத்தவில்லை. கிட் சியாங் ஜோகூரில் களத்தில் இறங்கி மக்களைச் சந்திப்பார் என்று மட்டுமே லியூ சின் தோங் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

லிம் கிட் சியாங்கின் இடது கிட்னியில் சிறிய அளவிலான புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.