Home நாடு 93 வயதான ஒருவர் மலேசியாவின் எதிர்காலமாக இருக்க முடியுமா? – நஜிப் கேள்வி!

93 வயதான ஒருவர் மலேசியாவின் எதிர்காலமாக இருக்க முடியுமா? – நஜிப் கேள்வி!

868
0
SHARE
Ad

Najib-கோத்தா கினபாலு – 93 வயதான ஒருவர் மலேசியாவின் எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியுமா? என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சபாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய முன்னணி கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ற இரவு விருந்தில் பேசிய நஜிப், “நான் உங்களிடம் விட்டுவிடுகிறேன். யோசித்துப் பாருங்கள். நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என்று நஜிப் தெரிவித்தார்.

“நாட்டின் வளர்ச்சி, அமைதி, மக்களிடையே நல்லிணக்கம் என எல்லாவற்றிலும் தேசிய முன்னணி அரசு நிரூபித்திருக்கிறது. மேலும் மலேசியாவின் எதிர்காலத்தை யோசித்து அடுத்த 30 ஆண்டுகளுக்கான திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.”

#TamilSchoolmychoice

“ஆனால் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக ஒழுங்கற்றே இருக்கின்றன. ஆனால் நாங்கள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபித்திருக்கின்றோம்” என்று நஜிப் தெரிவித்திருக்கிறார்.

14-வது பொதுத்தேர்தலில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22 தொகுதிகளுக்குக் குறைவில்லாமலும், 60 சட்டமன்றத் தொகுதிகளில் 48-க்கு மேற்பட்டும் தேசிய முன்னணி வெற்றியடைய தேசிய முன்னணி ஒற்றுமையோடு களமிறங்க வேண்டும் என்றும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.