Home நாடு “சரியான பாதைக்குத் திரும்புங்கள்” – மகாதீருக்கு நஜிப் மகன் வலியுறுத்து!

“சரியான பாதைக்குத் திரும்புங்கள்” – மகாதீருக்கு நஜிப் மகன் வலியுறுத்து!

1080
0
SHARE
Ad

Nazifuddin Najibகோலாலம்பூர் -பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மகனான நசிபுதின் கூறியிருக்கிறார்.

தனது தாத்தா அப்துல் ரசாக் ஹுசைன் அம்னோவைப் பாதுகாக்கத் தான் மகாதீரைக் கொண்டு வந்தார் என்று குறிப்பிட்டிருக்கும் நசிபுதின், மாறாக அதை அழிப்பதற்காக இல்லை என்றும் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார்.

“அம்னோவை வலுப்படுத்தவும், தற்காக்கவும், மலேசியாவைத் தலைமை தாங்கி உலக அளவிற்குக் கொண்டு செல்லவும் தான் ரசாக், மகாதீரைக் கொண்டு வந்தார். அம்னோவை அழிப்பதற்காக அல்ல”

#TamilSchoolmychoice

“மகாதீர், சரியான பாதைக்குத் திரும்புகள்.ரசாக் வகுத்த பாதை தான் உங்களை 4-வது பிரதமராக பதவி வகிக்க வைத்தது” என்று நசிபுதின் நஜிப் தெரிவித்திருக்கிறார்.