Home நாடு கெப்போங் தொகுதியில் கெராக்கான் மீண்டும் போட்டி

கெப்போங் தொகுதியில் கெராக்கான் மீண்டும் போட்டி

967
0
SHARE
Ad
tan seng giaw-DAP-kepong MP
ஜசெகவின் டான் செங் கியாவ் – கெப்போங் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினர்

கோலாலம்பூர் – கூட்டரசுப் பிரதேசத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகவும், ஜசெகவின் கோட்டையாகவும் திகழும் கெப்போங் தொகுதியில் இந்த முறை கெராக்கான் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாரம்பரியமாக தேசிய முன்னணி சார்பில் கெராக்கான் போட்டியிட்டு வந்த கெப்போங் தொகுதியை கடந்த பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சி பிபிபி கட்சிக்கு (தற்போது மைபிபிபி கட்சி) விட்டுக் கொடுத்தது.

gerakan-logoதேசிய முன்னணி சார்பில் பிபிபி கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட டத்தோ ஏ.சந்திரகுமணன் 40,307 வாக்குகள் வித்தியாசத்தில் ஜசெகவின் டான் செங் கியாவ்விடம் படுமோசமானத் தோல்வியைத் தழுவினார்.

#TamilSchoolmychoice

தற்போது சந்திரகுமணன் மைபிபிபி கட்சியை விட்டு விலக்கப்பட்டு விட்டார்.

மைபிபிபி கட்சிக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி இந்த முறை கேமரன் மலையாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

kepong-parliament-2013-results
கெப்போங் நாடாளுமன்றம் – 2013 பொதுத் தேர்தல் முடிவுகள்

இந்தச் சூழலில்தான் கெப்போங் நாடாளுமன்றத் தொகுதியில் கெராக்கான் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பக்காத்தான் கூட்டணி தொகுதி உடன்பாட்டின்படி கெப்போங் தொகுதியில் வழக்கமாகப் போட்டியிடும் ஜசெகவே மீண்டும் போட்டியிடும்.

இங்கே தொடர்ந்து பல தவணைகளாகப் போட்டியிட்டு வந்த 75 வயதான டான் செங் கியாவ் முதுமை காரணமாக இந்த முறை போட்டியிட மாட்டார் எனக் கருதப்படுகிறது. கெப்போங் தொகுதியைக் கடந்த 8 தவணைகளாக 1982 முதல் தற்காத்து வந்திருக்கும் சாதனையை டான் செங் கியாவ் கொண்டிருக்கிறார்.