Home நாடு அமானா சஹாம் பங்குகள்: இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இராஜேந்திரன் வேண்டுகோள்

அமானா சஹாம் பங்குகள்: இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இராஜேந்திரன் வேண்டுகோள்

1608
0
SHARE
Ad
sedic-rajendran-ns-pc-26012018 (5)
செடிக் தலைமை இயக்குநர் முனைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன்

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜனவரி 29-ஆம் தேதி முதற்கொண்டு இந்திய சமுதாயத்திற்கென பிரத்தியேகமாக விநியோகிக்கப்படவிருக்கும் 1.5 பில்லியன் அமனா சஹாம் சத்து பங்குகளைப் பெறும் வாய்ப்பை இந்திய சமூகம் தயங்காமல் முன்வந்து முனைப்புடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செடிக் இலாகாவின் தலைமை இயக்குநர் முனைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.

இன்று வெள்ளிக்கிழமை தலைநகரில் பத்திரிக்கையாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போது இராஜேந்திரன் இந்த அறைகூவலையும், அதைத் தொடர்ந்து அமனா சஹாம் பங்குகள் குறித்த விளக்கங்களையும் வழங்கினார்.

அமானா சஹாம் பங்குகள் விநியோகம் குறித்த விளக்கம்

sedic-rajendran-ns-pc-26012018 (4)பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் அவர்கள் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்டில்) அறிவித்திருந்ததைத் தொடர்ந்து மலேசிய இந்தியச் சமூகம் பயனடையும் வகையில் இந்த முதலீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (PNB)  நிறுவனத்தின் துணை நிறுவனமான அமானா சஹாம் நேஷனல் பெர்ஹாட் (Amanah Saham Nasional Berhad)  கூடுதலாக 150 கோடி (1.5 பில்லியன்) அமானா சஹாம் சத்து மலேசியா (Amanah Saham 1Malaysia) பங்குகளை இந்தியர்கள் மட்டும் முதலீடு செய்யும் வகையில் வெளியீடு செய்யவுள்ளது. இப்பங்கு முதலீட்டில் ஒவ்வொரு தனி நபருக்கும், ஏற்கெனவே இதே முதலீட்டுத் திட்டத்தில் வாங்கியுள்ள பங்குகள் உட்பட, உச்ச வரம்பாக 30,000 பங்குகள் வரையில் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.  2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் (பட்ஜெட்டின்) கீழ் அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டம் இந்தியர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் – நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பங்குடமையில் இந்தியர்களின் விழுக்காட்டை உயர்த்தும் – அரசாங்கத்தின் கடப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

sedic-rajendran-ns-pc-26012018 (3)
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டத்தோ என்.எஸ்.இராஜேந்திரனுடன் செடிக் துணைத் தலைமை இயக்குநர் மனோ வீரபத்திரன், கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் நாகையா மற்றும் செடிக் அதிகாரிகள்….

அமானா சஹாம் சத்து மலேசியா (Amanah Saham 1Malaysia) பங்குகள் முதன் முதலில் 2009ஆம் ஆண்டில் அமானா சஹாம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டன. இம்முதலீட்டின் வாயிலாக பங்குதாரர்களின் பங்குகள் நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கப்படுவதோடு பல்வேறு முதலீட்டின் வாயிலாக முறையானதும் தொடர்ச்சியானதுமான வருமானம் கிடைக்கப்பெறுவதையும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கான இக்கூடுதல் 150 கோடி (1.5 பில்லியன்) பங்குகள் ஒதுக்கப்படுவதன் வழி நாட்டில் அவர்களின் பங்குரிமை  வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய முடியும்.

மனு செய்வது எப்படி?

இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 150 கோடி (1.5 பில்லியன்) இக்கூடுதல் பங்குகள் எதிர்வரும் 29 ஜனவரி 2018 தொடங்கி விற்றுத் தீர்க்கும் வரையில் விற்பனையில் இருக்கும். இக்கூடுதல் அமானா சஹாம் சத்து மலேசியா (Amanah Saham 1Malaysia) பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகின்றவர்கள் அருகில் உள்ள அமானா சஹாம் நேசினல் பெர்ஹாட் கிளை அலுவலகங்களில் அல்லது அதன் முகவர்களாகச் செயல்படும் Maybank, CIMB, RHB, Pos Malaysia, Affin Bank, Alliance Bank, AM Bank,  Bank Muamalat ஆகிய வங்கிகளில் அல்லது www.myasnb.com.my எனும் அகப்பக்கத்தின் வாயிலாகவோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளளலாம்.

கூடுதல் தகவல்களுக்கு www.asnb.com.my அல்லது www.sedic.my ஆகிய இணையத்தளங்களை வலம் வரவும்.