
புதுடில்லி – இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று ஜனவரி 25-ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.
இன்று நடைபெற்ற இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்ட சிறப்பு அணிவகுப்பையும் நஜிப் தனது துணைவியாருடன் பார்வையிட்டார். பிரமுகர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் அமர்ந்து பிரதமர் தம்பதியர் அணிவகுப்பு சாகசங்களைப் பார்வையிட்டனர்.




