Home நாடு ஏழ்மை நிலை இந்தியக் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் அமனா சஹாம் பங்குகள் – விவரங்கள்...

ஏழ்மை நிலை இந்தியக் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் அமனா சஹாம் பங்குகள் – விவரங்கள் விரைவில் – இராஜேந்திரன் அறிவிப்பு

1581
0
SHARE
Ad
sedic-rajendran-ns-pc-26012018 (1)
செடிக் தலைமை இயக்குநர் முனைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன்

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜனவரி 29-ஆம் தேதி முதற்கொண்டு மலேசிய இந்தியர்களுக்கென பிரத்தியேகமாக விநியோகிக்கப்படவிருக்கும் 1.5 பில்லியன் அமனா சஹாம் சத்து பங்குகள் குறித்த விவரங்களை நேற்று தலைநகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்ட பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செடிக் இலாகாவின் தலைமை இயக்குநர் முனைவர் டத்தோ என்.எஸ்.இராஜேந்திரன், ஏழ்மை நிலையிலுள்ள இந்தியக் குடும்பங்களுக்கு கடனாக வழங்கப்படவிருக்கும் கூடுதல் பங்குகள் குறித்த சில விளக்கங்களையும் தெரிவித்தார்.

ASNB - amanah saham satu malaysia-குறிப்பாக B40  எனக் குறிப்பிடப்படும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் பங்கு முதலீட்டு  அளவை அதிகரிக்கும் வகையில், அரசாங்கம் வட்டியில்லாக் கடன் திட்டத்தின் வழி 5 ஆண்டு கால அவகாசத்தில் அவர்கள் வாங்கிப் பயன்பெறும் வகையில்  50 கோடி (500 மில்லியன்) பங்குகளை ஒதுக்கியுள்ளது.

தகுதியுடைய ஒவ்வொரு B40 இந்தியக் குடும்பத்திற்கும் வட்டி இல்லாக் கடனாக 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டுப் பின்னர் அப்பணம் அமானா சஹாம் சத்து மலேசியாவில் (Amanah Saham 1Malaysia) முதலீடு செய்யப்படும். இம்முதலீட்டுத் திட்டம் படிப்படியாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 100,000  B40 இந்திய குடும்பங்களின்  சேமிப்பை அதிகரிக்கச் செய்யும்.

sedic-amanah saham-announcement-
அமானா சஹாம் பங்குகள் குறித்த அறிவிப்பை கடந்த ஜனவரி 23-ஆம் தேதி மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் செயலாக்கக் குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வெளியிட்டபோது…அருகில் என்.எஸ்.இராஜேந்திரன், பிஎன்பி நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் வாஹிட் பின் ஓமார்...
#TamilSchoolmychoice

இத்திட்டம் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களால் அடுத்த மாதம் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைக்கப்படும்போது இந்தத் திட்டத்தின் முழு விவரங்களும் அறிவிக்கப்படும் என்றும் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்தியர்களுக்கு இதுகாறும் அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்து வருகிறது. 800க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளுக்கும் தனியார் திறன் பயிற்சி மையங்களுக்கும் (ILKS) வழங்கப்பட்ட நிதியின் வாயிலாக 550,000க்கும் மேற்பட்ட B40 பிரிவைச் சேர்ந்தோர் பயனடைய பல்வேறு வாய்ப்புகள் எற்படுத்தப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி RM140 கோடி (RM1.4 billion) வணிகக் கடனுதவியின் வழி 30,000 தொழில் முனைவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அமானா சஹாம் சத்து மலேசியா பங்குகள் தொடர்பான தகவல்களையும் மனுசெய்யும் முறைகள் தொடர்பான விளக்கங்களையும் செடிக் அவ்வப்போது தொடர்ந்து வழங்கி வரும். கூடுதல் தகவல்களுக்கு www.sedic.my எனும் அகப்பக்கத்தை அல்லது @mysedic எனும் முகநூல் பக்கத்தை வலம் வரவும்.