Home இந்தியா கல் எறிய, சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும் – சடகோப ராமானுஜ ஜீயர்!

கல் எறிய, சோடா பாட்டில் வீச எங்களுக்கும் தெரியும் – சடகோப ராமானுஜ ஜீயர்!

1120
0
SHARE
Ad

Sadagoba Ramanuja jeeyarசென்னை – கவிஞர் வைரமுத்து வரும் பிப்ரவரி 3-ம் தேதிக்குள், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சடகோப ராஜானுஜ ஜீயர் கூறியிருக்கிறார்.

மேலும், இந்து மதம் குறித்து இனி யாராவது தவறாகப் பேசினால், கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் தங்களுக்கும் தெரியும் என்றும், ஆனால் தாங்கள் அது போன்ற செயல்களில் ஈடுபடாதவர்கள் என்றும் அவர் கருத்துக் கூறியிருக்கிறார்.

வைரமுத்துவுக்கு எதிராக கடந்த ஜனவரி 17-ம் தேதி, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிய மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர், அன்றைய நாளே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice