Home நாடு தைப்பூசத்தில் தேங்காய்களை அளவாக உடையுங்கள்: பினாங்கு நுகர்வோர் சங்கம்

தைப்பூசத்தில் தேங்காய்களை அளவாக உடையுங்கள்: பினாங்கு நுகர்வோர் சங்கம்

807
0
SHARE
Ad

Coconut breakingஜார்ஜ் – தைப்பூசத் திருநாளின் போது பக்தர்கள் தங்களது வழிபாட்டின் ஒருபகுதியாக தேங்காய் உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

நிறைய தேங்காய் உடைத்து அதனை வீணாக்குவதை விட, தேங்காய்களின் அளவைக் குறைத்துக் கொண்டு, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்து உதவும் படி, பினாங்கு நுகர்வோர் சங்கத்துடன் இணைந்து பல இந்து அமைப்புகள் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

இது குறித்து பினாங்கு நுகர்வோர் சங்கத் தலைவர் என்.வி.சுப்பாராவ் கூறுகையில், இந்துக்கள் தங்களது இறை வழிபாட்டின் ஒருபகுதியாக தேங்காய் உடைத்து வழிபடுவது வழக்கம். கடவுளுக்குப் படைக்கும் எந்த ஒரு உணவும், பிரசாதமாக மற்ற பக்தர்களுக்கு வழங்க வேண்டுமே தவிர அதனை அப்படியே வீணாகும்படி விட்டுச் செல்லக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், தேங்காய் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டும், அதனை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் சுப்பாராவ் குறிப்பிட்டிருக்கிறார்.

“பேராக் மாநிலம் பாகான் டத்தோவில் இருந்து தான் தேங்காய்களைக் கொண்டு வர வேண்டும். என்றாலும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தேங்காய்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது” என்றும் சுப்பாராவ் தெரிவித்திருக்கிறார்.

உள்ளூர் வர்த்தக, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சகம், தேங்காய்களின் விலையை தைப்பூசத்தின் போது கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சுப்பாராவ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

வழக்கமாக 1 ரிங்கிட் 50 காசுகளுக்கு விற்கப்படும் ஒரு தேங்காய், தைப்பூசத்தின் போது மட்டும் 4 ரிங்கிட் 50 காசுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் சுப்பாராவ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு, 350,000 தேங்காய்கள் உடைக்கப்பட்டதாகவும் சுப்பாராவ் குறிப்பிட்டிருக்கிறார்.

சுப்பாராவ் தலைமையில் நடைபெற்ற இச்செய்தியாளர்கள் சந்திப்பில், பினாங்கு மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தலைவர் வி.நந்தகுமார், பினாங்கு மலேசிய இந்து சங்க உதவித் தலைவர் ஏ.தர்மன் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.