Home நாடு நெகிரி செம்பிலான் பக்காத்தான் கூட்டணி தொகுதிகள் பங்கீடு

நெகிரி செம்பிலான் பக்காத்தான் கூட்டணி தொகுதிகள் பங்கீடு

967
0
SHARE
Ad

pakatan harapan-logoகோலாலம்பூர் – தீபகற்ப மலேசியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, மாநில ரீதியிலான தொகுதி பங்கீட்டை நெகிரி செம்பிலானுக்கு முதன் முறையாக அறிவித்திருக்கிறது.

அதன்படி நெகிரி செம்பிலானில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் ஜசெக 2013-இல் வெற்றி பெற்ற அனைத்து 11 தொகுதிகளிலும், மீண்டும் போட்டியிடுகின்றது. பிகேஆர் 12 தொகுதிகளிலும், அமானா 7 தொகுதிகளிலும் பெர்சாத்து கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை சிரம்பானில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பானின் நெகிரி மாநில மாநாட்டில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதற்கான உடன்பாடு நேற்று சனிக்கிழமை காணப்பட்டு, கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜசெக சென்னா, பகாவ், நீலாய், லோபாக், தெமியாங், புக்கிட் கெபாயாங், ரஹாங், மம்பாவ், செனவாங், லுக்குட், ரெப்பா

ஜெரம் பாடாங், சிக்காமாட், அம்பாங்கான், ஜூவாசே, பிலா, லாபு, ரந்தாவ், சுவா, லிங்கி, போர்ட்டிக்சன், கெமாஸ், சுங்கை லியு ஆகிய 12 தொகுதிகளே பிகேஆர் போட்டியிடும் தொகுதிகளாகும்.

அமானா கட்சிக்கு செர்த்திங், கிளவாங், ஜோஹோல், பாரோய், செனாலிங், லெங்கெங், கோத்தா தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

பாலோ, ஸ்ரீ மெனாந்தி, செம்போங், கெமெஞ்சே, பெர்தாங், பாகான் பினாங் ஆகிய 6 தொகுதிகள் மகாதீர்-மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து குறிவைக்கும் தொகுதிகளாகும்.

2013 பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 36 தொகுதிகளில் அப்போதைய எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ராயாட் 14 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதன்காரணமாக, தேசிய முன்னணி நெகிரி மாநில சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது.

நாடாளுமன்றத் தொகுதிகளில் எந்தக் கட்சி?

நெகிரி மாநிலத்தின் 8 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பங்கீடுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி சிரம்பான் மற்றும் ராசா ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜசெக போட்டியிடும். தெலுக் கெமாங், ரெம்பாவ் தொகுதிகளில் பிகேஆர் களமிறங்க, பெர்சாத்து ஜெம்போல் மற்றும் கோலப்பிலா ஆகிய இரண்டு தொகுதிகளிலும், ஜெலுபு மற்றும் தம்பின் ஆகிய இரண்டு தொகுதிகளில் அமானா போட்டியிடும்.