Home இந்தியா வைரமுத்துவுக்கு எதிராக ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்!

வைரமுத்துவுக்கு எதிராக ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்!

1236
0
SHARE
Ad

Sadagobaramanujajeeyarசென்னை – ஆண்டாள் குறித்துச் சர்ச்சைக் கருத்து கூறிய கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறி மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.

இதற்கு முன்பு கடந்த ஜனவரி 17-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த ஜீயர், அன்றைய நாளே அதனைக் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர், வைரமுத்துவுக்கு எதிராக நடந்த போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஜீயர், எங்களுக்கும் கல், சோடா பாட்டில் வீசத் தெரியும் என்று கூறி, பின்னர் அதற்காக ஆண்டாள் சன்னதியில் தானே மன்னிப்புக் கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.