Home நாடு நெஞ்சு தொற்று: மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!

நெஞ்சு தொற்று: மகாதீர் மருத்துவமனையில் அனுமதி!

835
0
SHARE
Ad

Marina Mahathirகோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது நெஞ்சு தொற்று காரணமாக தேசிய இருதய நிறுவன மருத்துவமனையில் (ஐஜேஎன்) அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

92 வயதான மகாதீர், கடுமையான இருமல் மற்றும் தொற்று காரணமாக பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஐஜேஎன் இன்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, மகாதீரின் உடல்நிலை குறித்து அவரது மகளும் போராட்டவாதியுமான மரீனா மகாதீர் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், “அப்பாவை இன்று காலை சந்தித்தேன். அவர் நலம். அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. விரைவில் அவர் திரும்புவார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
பெந்தோங்கில் இன்று நடைபெறவிருந்த பெர்சாத்து கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் மகாதீர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் மருத்துவர்களின் அறிவுரையின் படி மகாதீர் அதனை இரத்து செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.