Home தேர்தல்-14 14-வது பொதுத்தேர்தல்: 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிஎஸ்எம்!

14-வது பொதுத்தேர்தல்: 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது பிஎஸ்எம்!

902
0
SHARE
Ad

S. Arutchelvan2கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக பிஎஸ்எம் (Parti Sosialis Malaysia) கட்சி அறிவித்திருக்கிறது.

இது குறித்து பிஎஸ்எம் கட்சியின் செயலவை உறுப்பினர் எஸ்.அருட்செல்வம் இன்று சனிக்கிழமை வெளியிட்டிருக்கும் தகவலில், “14-வது பொதுத்தேர்தலில் பிஎஸ்எம் 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 12 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. ஆனால் வேட்பாளர்கள் பெயர் பின்னர் அறிவிக்கப்படும். காரணம் பிஎஸ்எம் கட்சியின் கீழ், கட்சியில் இல்லாதவர்களும் போட்டியிட விரும்புகின்றனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், பிஎஸ்எம் கட்சியின் போட்டியிட யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும், அவர்கள் மூன்று விதிமுறைகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என்றும் அருட்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஒன்று சொத்துக்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இரண்டு, மோசமான அரசியல் கூடாது. மூன்று தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் சேவை மையத்தைத் தொடங்க வேண்டும். இம்மூன்று விதிமுறைகளுக்குச் சம்மதிப்பவர்கள் தாராளமாக பிஎஸ்எம் கட்சியின் கீழ் போட்டியிடலாம் என்றும் அருட்செல்வன் குறிப்பிட்டிருக்கிறார்.