Home கலை உலகம் பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்!

பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம்!

1286
0
SHARE
Ad

Pariyerum perumalசென்னை – பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உருவாகியிருக்கும், ‘பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படத்தின் முதல் பார்வை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

இயக்குநர் ராம் இத்திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார்.

படத்தின் பெயரும், அதன் முதல் பார்வையும் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

“எங்கள் செல்வத்தின் முதல் படம். அவனுடைய 12 வருட உழைப்பின் பொறுமையின் முதல் விளைச்சல் “பரியேறும் பெருமாள்”. இயக்குநர் நண்பர் பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் முதல் திரைப்படத் தயாரிப்பு. வாழ்த்துக்கள்” என்று ராம் தனது டுவிட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.