Home நாடு சாஹிட்டின் மருமகன் ஒவ்வாமையால் இறந்தார் – நீதிமன்றத்தில் தகவல்!

சாஹிட்டின் மருமகன் ஒவ்வாமையால் இறந்தார் – நீதிமன்றத்தில் தகவல்!

969
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியின் மருமகன் சையத் அல்மான் ஜைன, பல் சிகிச்சையின் போது மரணமடைந்ததற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை தான் என கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கூறப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி, இம்பெரியல் பல் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்ட போது சையத் அல்மான் சைன் திடீரென மரணமடைந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில், புத்ராஜெயா தனியார் மருத்துவப் பயிற்சிக் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த விசாரணை அதிகாரி டாக்டர் சித்தி காடிஜா ஹவாரி (வயது 37) நீதிமன்றத்தில் கூறுகையில், பல் சிகிச்சை செய்வதற்காக சையத்துக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டபோது, அவர் அனாபிலாசிக்ஸ் (anaphylaxis) என்ற ஒவ்வாமையால் மரணமடைந்ததாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice