Home உலகம் “அனைவருக்குமான தென் ஆப்பிரிக்காவை உருவாக்குவோம்” – புதிய அதிபர் அறைகூவல்

“அனைவருக்குமான தென் ஆப்பிரிக்காவை உருவாக்குவோம்” – புதிய அதிபர் அறைகூவல்

922
0
SHARE
Ad
சிரில் ராமபோசா

பிரிட்டோரியா – தென் ஆப்பிரிக்காவின் அதிபராகக் கடந்த பல ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த ஜேக்கப் சுமா பதவி விலகியதைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 16-ஆம் தேதி அந்நாட்டின் புதிய அதிபராக சிரில் ராமபோசா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

“தென் ஆப்பிரிக்காவின் விடுதலை வீரர் நெல்சன் மண்டேலாவுக்கு கௌரவம் வழங்கும் வண்ணம், நாம் அனைவரும் ஒன்றுபட்டு, அனைவருக்குமான புதிய, மேலும் சிறந்த தென் ஆப்பிரிக்காவை உருவாக்குவோம்” என அதிபர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் ராமபோசா தெரிவித்தார்.

2009-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் நான்காவது அதிபராகப் பதவிக்கு வந்த ஜேக்கப் சுமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகார அத்துமீறல் புகார்களை எதிர்நோக்கியுள்ளார்.