இந்நிலையில், ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினரும், அமனா தொலைத்தொடர்புத் துறை இயக்குநருமான காலிட் சமட் இது குறித்து கருத்துக் கூறுகையில், “பாஸ் கட்சியால் மலாய்காரர்களின் வாக்குகளில் பிளவு ஏற்படப்போவது குறித்து பக்காத்தான் ஹராப்பான் அச்சமடையத் தேவையில்லை. காரணம், மலாய்க்காரர்களின் வாக்குகளில் தற்போது வரை எந்த ஒரு குழப்பநிலையும் இல்லை. அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.”
“நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிந்து வருகின்றது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஒன்றே மக்களின் தேர்வாக இருக்கப்போகிறது. அப்படியிருக்கையில், பாஸ் கட்சியால் மும்முனைப் போட்டி ஏற்பட்டு மலாய்க்காரர்களின் வாக்குகள் பிளவு பட்டாலும் கூட, பக்காத்தான் ஹராப்பானுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்திருக்கிறார்.