கோலாலம்பூர் – அஞ்சல் வாக்குகளுக்கான பதிவுகளை உடனடியாக நிறுத்துமாறு பெர்சே அமைப்பு, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து பெர்சே அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“2018-ம் ஆண்டிற்கான வரவு செலவுக் கணக்குகளின் படி, அஞ்சல் வாக்குகள் அனைத்தும் முன்கூட்டிய வாக்குகளாக மாற்றப்படுகின்றது. தேர்தலுக்கு முந்தைய நாள் முன்கூட்டிய வாக்குகள் பதிவு செய்யப்படும். அன்றைய நாளின் முடிவிலேயே வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டுவிடும்.”
“அஞ்சல் வாக்கு முறைகள், தேர்தல் முடிவுகளை பாதிக்கிறது என பெர்சே பலமுறை சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், தவறான பயன்பாடு, துஷ்பிரயோகம் மற்றும் வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பில் இருக்கும் பின்தங்கிய நிலை ஆகியவற்றால், அஞ்சல் வாக்கு முறைகளை நீக்கும்படி பெர்சே வலியுறுத்தியிருக்கிறது” என்றும் பெர்சே தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.