Home இந்தியா முதல்வராக ஆசைப்படும் பன்னீர்செல்வம் – தினகரன் குற்றச்சாட்டு!

முதல்வராக ஆசைப்படும் பன்னீர்செல்வம் – தினகரன் குற்றச்சாட்டு!

891
0
SHARE
Ad

சென்னை – கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு, தினகரனுக்கு ஆதரவு தருவதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் அணியிலிருந்து, தினகரன் அணிக்கு மாறியிருக்கிறார்.

இன்று வெள்ளிக்கிழமை டிடிவி தினகரனைச் சந்தித்த அவர், தனது ஆதரவை தினகரனுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்று ஒரு வருடம் ஆகிவிட்டதால், அவரை ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகச் சொல்லி வருவதாக பிரபு தெரிவித்தார்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், பிரதமரின் அறிவுறுத்தியதால் தான், துணைப்பிரதமராகப் பதவியேற்றதாகப் பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார் என்றும் தினகரன் தெரிவித்தார்.