Home உலகம் கள்ள உறவு அம்பலம்: பதவி விலகிய ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்!

கள்ள உறவு அம்பலம்: பதவி விலகிய ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்!

915
0
SHARE
Ad

சிட்னி – தனது முன்னாள் ஊடகச் செயலாளருடன் கள்ள உறவு வைத்திருந்தது அம்பலமானதால் ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் பார்னேபி ஜோய்ஸ், பதவி விலகுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

பார்னேபியின் இந்த இரகசியச் செயல்பாடு, இரண்டு வாரங்களுக்கு முன்பு, அம்பலமானதையடுத்து, ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கோம் டார்புல்லுக்கும், பார்னேபிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

இதனால் மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்த பார்னேபி, வரும் திங்கட்கிழமை தான் ராஜினாமா செய்யப்போவதை இன்று அறிவித்திருக்கிறார்.