Home நாடு உலகத் தாய்மொழி தினம் – கோலாலம்பூரில் ஸ்டாலின் உரையாற்றுகிறார்

உலகத் தாய்மொழி தினம் – கோலாலம்பூரில் ஸ்டாலின் உரையாற்றுகிறார்

1808
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கண்ணதாசன் அறவாரியமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டபத்தில் நடத்தும் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் நேற்று சனிக்கிழமை தனது துணைவியாருடன் கோலாலம்பூர் வந்தடைந்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் சிறப்பு வருகை புரிவார். துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் ஆகியோரும் இந்த விழாவில் உரையாற்றுகின்றனர்.

#TamilSchoolmychoice

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நடைபெறும் சிறப்பு அங்கத்தில் மு.க.ஸ்டாலின் உரை இடம் பெறுவதோடு, அந்த நிகழ்ச்சியில் மலேசியாவில் தமிழுக்காக சேவையாற்றிய 10 பிரமுகர்களும் கௌரவிக்கப்படுகின்றனர்.