Home நாடு கழுத்துப் பட்டையுடன் பணிக்குத் திரும்பிய அஸ்மின் அலி!

கழுத்துப் பட்டையுடன் பணிக்குத் திரும்பிய அஸ்மின் அலி!

881
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் துணைத்தலைவருமான அஸ்மின் அலி, தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, இன்று திங்கட்கிழமை கழுத்துப் பட்டையுடன் பணிக்குத் திரும்பினார்.

இன்று காலை சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நடைபெற்ற மாநில நிதி தொடர்பான கூட்டத்தில் அஸ்மின் அலி கழுத்துப் பட்டையுடன் கலந்து கொண்டார்.

இது குறித்து சிலாங்கூர் மந்திரி பெசார் அலுவலக வியூக தொலைத்தொடர்பு இயக்குநர் இன் ஷாவ் லூங் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த வாரம் பிறக்கவிருக்கும் தனது முதல் பேரக்குழந்தையைப் பார்க்க அஸ்மின் அலி மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறார். அதற்காக தானே வீட்டை சுத்தம் செய்திருக்கிறார். அப்போது கனமான பொருள் ஒன்றை தூக்கிய போது அவரது தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.