இதைத் தொடர்ந்து விசாரணைகள் பிரேத பரிசோதனைகள் முடிவுற்று, ஸ்ரீதேவியின் நல்லுடல் துபாய் அரசு அதிகாரிகளால் மும்பை கொண்டு செல்லப்பட அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது அவரது நல்லுடன் துபாய் விமான நிலையம் வந்தடைந்ததாகவும், தனியார் விமானம் ஒன்றின் மூலம் அவரது நல்லுடல் இன்றிரவு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு மும்பை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை புதன்கிழமை (28 பிப்ரவரி 2018) பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவரது இறுதிச் சடங்குகள் மும்பை ஜூஹூ மயானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.