Home நாடு ரோபர்ட் குவோக்கைத் தற்காக்கும் நஜிப்பின் தம்பி!

ரோபர்ட் குவோக்கைத் தற்காக்கும் நஜிப்பின் தம்பி!

1181
0
SHARE
Ad
ரோபர்ட் குவோக் – நசிர் ரசாக்

கோலாலம்பூர் – அண்மைய சில நாட்களாக பலத்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது மலேசியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரரான ரோபர் குவோக் மீதான விவகாரம்.

எதிர்க்கட்சிகளுக்கும், அரசாங்கத்திற்கு எதிரான சில ஊடகங்களுக்கும் ரோபர்ட் குவோக் ஆளும் தேசிய முன்னணி அரசாங்கத்தை வீழ்த்த பணம் கொடுத்தார் என மலேசியா டுடே இணையத் தளத்தில் கட்டுரைகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ் ரோபர்ட் குவோக்கைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார்.

நஸ்ரி அசிசின் பேச்சுக்கு மசீச சார்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

ரோபர்ட் குவோக் சார்பில் அவரது அலுவலகத்தில் இருந்து விடுக்கப்பட்ட ஓர் அறிக்கையில் மலேசியனாக இருப்பதில் பெருமைப்படுவதாகவும், மலேசியாவில் கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி கூறுவதாகவும் ரோபர்ட் குவோக் கூறியிருந்தார்.

இணைய ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ரோபர்ட் குவோக் அலுவலக அறிக்கை எச்சரித்திருந்தது.

பிரதமர் நஜிப்பும் ரோபர்ட் குவோக்கின் அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்தார். எனினும் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பல தேசிய முன்னணி தலைவர்கள் எதிர்த்தும் ஆதரித்தும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

நசிர் ரசாக் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு

இந்த சூழலில்தான் சுமார் ஓராண்டுக்கு முன்னர் ரோபர்ட் குவோக்குடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுபதிவிட்டிருக்கும் பிரதமர் நஜிப்பின் தம்பி நசிர் ரசாக், “அவருடன் கடந்த பல ஆண்டுகளில் நிறைய நேரங்கள் செலவிடும் அதிர்ஷ்டம் எனக்கு வாய்த்தது. அவருடைய நூலையும் நான் படித்திருக்கிறேன். அவருடைய அத்தனை கருத்துகளோடும் நான் இணங்கிப் போவப் போவதில்லை. இருந்தாலும் ரோபர்ட் குவோக் நமது நாட்டின் விசுவாசி. மலேசிய வணிக அமைப்பின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவர். முதல் தரமான உன்னத மனிதர் (ஜெண்டில்மேன்)” எனவும் பதிவிட்டிருக்கிறார்.

அம்னோ தலைவர்கள் ரோபர்ட் குவோக்கிற்கு எதிராகக் கூறியிருக்கும் பேச்சுகள் சீன சமூகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அவற்றைத் தணிக்கும் நோக்கத்திலேயே – பிரதமரின் தம்பி நசிர் ரசாக் ஆத்திரப்படும் தரப்புகளை சாந்தப்படுத்தும் இலக்கோடு இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் எனக் கருதப்படுகிறது.