கோலாலம்பூர் – பினாங்கு சுரங்கப் பாதை ஊழல் விசாரணையை பிரச்சினையின்றி சுமூகமாக முடித்துத் தருவதாகக் கூறி, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திடம் 19 மில்லியன் ரிங்கிட் நிதி பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 வயதான ‘டத்தோஸ்ரீ’ கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
அவரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க புத்ரா ஜெயா மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இன்று திங்கட்கிழமை, அவரது தடுப்புக் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.