Home நாடு போலியான செய்திகளைத் தடுக்க புதிய சட்டம் – மாமன்னர் ஆதரவு!

போலியான செய்திகளைத் தடுக்க புதிய சட்டம் – மாமன்னர் ஆதரவு!

1178
0
SHARE
Ad
கோப்புப்படம்

கோலாலம்பூர் – நட்பு ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளைத் தடுக்க, புதிய சட்டம் கொண்டு வரும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு மாமன்னர் சுல்தான் முகமட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

13-வது நாடாளுமன்றத்தின், ஆறாவது தவணை, முதல் கூட்டத்தை இன்று திங்கட்கிழமை துவக்கி வைத்துப் பேசிய மாமன்னர் சுல்தான் முகமட், “சமுதாயத்தில், நல்ல பழக்கவழக்கங்களையும், ஒழுக்க நெறிகளையும் பாதுகாப்பதில் அனைவரும் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும்”

“எனவே, போலி செய்திகளைத் தடுக்க, புதிய சட்டங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு நான் எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என மாமன்னர் சுல்தான் முகமட் தெரிவித்தார்.