Home வணிகம்/தொழில் நுட்பம் டோனி பதவி விலகினாரா? – ஏர் ஆசியா மறுப்பு!

டோனி பதவி விலகினாரா? – ஏர் ஆசியா மறுப்பு!

1056
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நிதி தொழில்நுட்பத் துறைக்குள் நுழைவதால், ஏர் ஆசியா குழும தலைமைச் செயலதிகாரி மற்றும் ஏர் ஆசிய எக்ஸ் இணை குழுமத் தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸ் பதவி விலகுவதாக வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை என ஏர் ஆசியா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து ஏர் ஆசியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், டோனி பெர்னான்டஸ் ஏர் ஆசியாவில் இருந்து விலகி, நிதி தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டதாக நட்பு ஊடகங்களில் பரவி வரும் போலியான சிஎன்என் செய்தியை யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஏர் ஆசியாவின் வியூக இயக்கம் மற்றும் வர்த்தக இயக்கத்தில் டோனி பெர்னான்டஸ் தொடர்ந்து பொறுப்பேற்று நடத்துவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

முன்னதாக, டோனி பெர்னான்டஸ் தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், “உண்மை என்னவென்றால் நான் ஏர்ஆசியாவை விட்டு விலகுவதற்கு முன் இன்னும் நிறைய பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஏர் ஆசியா நிதி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கிறது. மிகுந்த மதிப்புடைய சில சொத்துகள் கைக்கு வருகின்றன” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.