Home அரசியல் கிளாந்தான் மக்கள் பொதுத்தேர்தலில் பாஸ் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் – ராய்ஸ்

கிளாந்தான் மக்கள் பொதுத்தேர்தலில் பாஸ் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் – ராய்ஸ்

753
0
SHARE
Ad

rais_yatim

பாசிர் பூத்தே,மார்ச் 27 – கிளாந்தானில்  தனியார் காலி நிலங்கள்  அனைத்தையும், நிறுவனங்களுக்கு துண்டு போட்டுக் கொடுத்த பாஸ் கட்சிக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று தகவல் தொடர்பு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் தெரிவித்துள்ளார்.

நேற்று பாசிர் பூத்தேவில் நடைபெற்ற கலாசார சாலை கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராய்ஸ்,

#TamilSchoolmychoice

” கிளாந்தான் மக்களின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், நிலங்கள் அனைத்தையும் தனியார் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்திருக்கும் மாநில பாஸ் அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ஏக்கர் நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள பாஸ் அரசு, அதற்கு பதிலாக உலு கிளாந்தானில் வசிக்கும் எத்தனையோ ஏழை மக்களுக்கு அந்நிலங்களை வழங்கியிருக்கலாம். எனவே  கிளாந்தான் மக்கள் நிலங்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து , மாநில அரசாங்கத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்” என்றார்.

மேலும் அம்மாநில முதலமைச்சர் நிக் அஜீஸ் நிக், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் மலாய் பண்பாடுகளின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாதவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார் என்று ராய்ஸ் கடுமையாகச் சாடினார்.