சியோல் – தென்கொரியாவில் சுமார் 5,000 மலேசியர்கள், சட்டவிரோதமாகத் தங்கியிருந்து பணியாற்றி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் அனைவரும் அங்கு அகதிகள் போலவும், எப்போதும் குடிநுழைவு அதிகாரிகளுக்குப் பயந்து ஓடி ஒளியும் வாழ்க்கையையும் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
வேலைவாய்ப்பு விளம்பரங்களின் வாக்குறுதிகளை நம்பி ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுகள் கட்டணமாகக் கட்டி சுற்றுலா விசாவில் தென்கொரியாவுக்குச் சென்ற மலேசியர்கள், அங்கு கூறப்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் நெருக்கடி நிலையைச் சந்ததனர்.
இதனை ஆய்வு செய்ய, ஸ்டார் மீடியா குழுமத்தைச் சேர்ந்த எம்ஸ்டார் இணையதளம், குழு ஒன்றை தென்கொரியா அனுப்பி ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில் நிறைய மலேசியர்கள் தென்கொரியாவில் ஆதரவற்ற நிலையில் தவித்து வருவது கண்டறியப்பட்டிருக்கிறது.
அவர்களில் பெரும்பாலானோர் சாப்பாட்டிற்கு கூட வழியின்றி ரொட்டிகளை சாப்பிட்டு வருவதும், நிறைய பேர் உறங்குவதற்கு இடமின்றி மசூதிகளுக்கு வெளியே உறங்குவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
தகவல்: நன்றி ஸ்டார்