Home இந்தியா புயல் எச்சரிக்கை: கன்னியாகுமரி மீனவர்கள் 600 பேர் கரை திரும்பவில்லை!

புயல் எச்சரிக்கை: கன்னியாகுமரி மீனவர்கள் 600 பேர் கரை திரும்பவில்லை!

952
0
SHARE
Ad

கன்னியாகுமரி – வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஆனால், ஏற்கனவே, கன்னியாகுமரியைச் சேர்ந்த 600 மீனவர்கள், சுமார் 52 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்று, நீண்ட நாட்களாக மீன்பிடித்து வருகின்றனர். அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அவர்களைத் தொடர்பு கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice