Home நாடு ஃபேஸ்புக், கூகுள் நிர்வாகிகளுடன் புத்ராஜெயா ஆலோசனை!

ஃபேஸ்புக், கூகுள் நிர்வாகிகளுடன் புத்ராஜெயா ஆலோசனை!

1057
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நட்பு ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளைத் தடுக்க, மலேசிய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை இயற்றும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

இந்நிலையில், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட முன்னணி நட்பு ஊடகங்களின் மலேசிய நிர்வாகிகளுடன் பிரதமர் துறை அமைச்சர் அசலினா ஒத்மான் சைட் நேற்று திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இச்சந்திப்பு நேற்று மலேசிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இச்சந்திப்பிற்குப் பிறகு அசலினா வெளியிட்டிருக்கும் தகவலில், “புதிதாக இயற்றப்படவிருக்கும் மசோதா விரிவானது, அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது”

“மேலும், அரசாங்கம், கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்குவதில் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறது என்பதற்கு ஆதாரமாகவும் இது இருக்கிறது” என அசலினா குறிப்பிட்டிருக்கிறார்.