Home வணிகம்/தொழில் நுட்பம் இனி 1 மணி நேரத்திற்குப் பின் கூட வாட்சாப் தகவல்களை அழிக்கலாம்!

இனி 1 மணி நேரத்திற்குப் பின் கூட வாட்சாப் தகவல்களை அழிக்கலாம்!

1908
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வாட்சாப் செயலியில் இனி, அனுப்பிய தகவல்களை 1 மணி நேரத்திற்குப் பிறகு கூட அழிக்க முடியும்.

ஐஓஎஸ் இயங்குதளத்தில் இந்தப் புதிய மேம்பாடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த 2017 அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ‘டெலிட் ஃபார் எவரிஒன்- Delete for Everyone’ மேம்பாட்டின் தொடர்ச்சியாக 7 நிமிடங்களுக்குள் தகவல்களை அழிக்கும் வசதியில் இருந்து, தற்போது 1 மணி நேரம், 8 நிமிடங்கள், 16 நொடிகள் வரை அனுப்பிய தகவல்களை அழிக்க முடியும் என வாபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) டுவீட் செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும், இந்த புதிய மேம்பாடு அண்ட்ரோய்டு இயங்குதளங்களுக்கு தற்போதைக்கு இல்லை. அது குறித்த மேல் விவரங்களும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.