Home நாடு நாற்காலி விழுந்து சிறுவன் மரணம்: 2-வது சந்தேக நபர் கைது!

நாற்காலி விழுந்து சிறுவன் மரணம்: 2-வது சந்தேக நபர் கைது!

742
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஸ்ரீபந்தாய் பிபிஆர் அடுக்குமாடிக் குடியிருப்பில், 16-வது மாடியிலிருந்து அலுவலக நாற்காலி விழுந்து 15 வயது சிறுவன் சதீஸ்வரன் மரணமடைந்த வழக்கில் இரண்டாவது சந்தேக நபரைக் கைது செய்து விசாரணை நடத்தியிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இவ்வழக்கில் வேதியியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், 23 வயதான பெண் இரண்டாவது சந்தேக நபராகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் மாநகரக் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாசிம் தெரிவித்தார்.

மேலும், “அப்பெண் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. புக்கிட் அமான் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறது. மேலும் அச்சந்தேக நபரிடம் ‘டிஜிட்டல் வாய்ஸ் ஸ்ட்ரெஸ் அனலைசர்’ பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. ஆனால் அதுவும் எதிர்மறை முடிவாகவே வந்திருக்கிறது” என்றும் மஸ்லான் லாசிம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அபெண் கடந்த மார்ச் 16-ம் தேதி, ஜாலான் டூத்தா நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.