Home நாடு ஏப்ரல் 2-ல் தேமு வேட்பாளர்களை அறிவிக்கிறதா?

ஏப்ரல் 2-ல் தேமு வேட்பாளர்களை அறிவிக்கிறதா?

688
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது வேட்பாளர்களை வரும் ஏப்ரல் 2-ம் தேதி, தேசிய முன்னணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

13 கூட்டணிக் கட்சிகளும், புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், அன்று தேசிய முன்னணித் தலைவர் நஜிப், தமது வேட்பாளர்களை அறிவிப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 13-வது பொதுத்தேர்தலின் போது, வேட்புமனுத் தாக்கலுக்கு 4 நாட்களுக்கு முன், தேசிய முன்னணி தமது வேட்பாளர்களுக்கு வேட்பாளர் நியமனப் பத்திரங்களை வழங்கியது.

#TamilSchoolmychoice

எனவே, இம்முறை, வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் வழங்கப்பட்டவுடன், 14-வது பொதுத்தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, வரும் ஏப்ரல் 7-ம் தேதி, புக்கிட் ஜாலில் அரங்கில், தேசிய முன்னணி தமது தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.