Home கலை உலகம் காலாவுக்காக கோலாலம்பூர் வருகிறார் ரஜினி!

காலாவுக்காக கோலாலம்பூர் வருகிறார் ரஜினி!

1099
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பா.ரஞ்சித் இயக்கத்தில் தான் நடித்திருக்கும் புதிய திரைப்படமான ‘காலா’-வின் விளம்பரத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலேசியாவிற்கு வரவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஏப்ரல் 27-ம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் ‘காலா’ திரைப்படத்தை வாங்கியிருக்கும் மலேசிய விநியோகஸ்தரான டிஎம்ஒய் கிரியேசன்ஸ் கூறியிருக்கும் தகவலில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி, டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவிருக்கும் ‘மாஸ் ரன் 2018’ என்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் ரஜினியைச் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு விட்டதாகவும், ரஜினியின் மேலாளர், மார்ச் 31 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையில் தேதி கொடுத்திருப்பதாகவும் டிஎம்ஒய் கிரியேசன்ஸ் செய்தி இணையதளம் ஒன்றிடம் கூறியிருக்கிறது.

#TamilSchoolmychoice