Home வணிகம்/தொழில் நுட்பம் ‘டெலிகிராம்’ குறுஞ்செயலி – 200 மில்லியன் பயனர்களைத் தொட்டது

‘டெலிகிராம்’ குறுஞ்செயலி – 200 மில்லியன் பயனர்களைத் தொட்டது

973
0
SHARE
Ad

துபாய் – ‘டெலிகிராம்’ என்ற தந்தி சேவைகளை மலேசியா போன்ற உலகின் பல நாடுகள் நிறுத்தி விட்ட வேளையில், அதே பெயரில் தொடங்கப்பட்டு பிரபலமடைந்து வரும் குறுஞ்செயலி தற்போது 200 மில்லியன் தீவிரப் பயனர்களை எட்டியிருப்பதாக துபாய் நகரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்படும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்எப் போலவே அமைப்பிலும், தொழில் நுட்பத்திலும் இயங்கும் டெலிகிராம், தனது குறுஞ்செயலி குறித்து எந்தவித விளம்பரமும் செய்யாமல், நடப்பு பயனர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களுக்கு அழைப்பு விடுத்து இணைத்துக் கொள்வதன் மூலமும் – தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமுமே – இந்த சாதனையை எட்டியிருப்பதாக அந்நிறுவனம் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 2013 முதல் செயல்பட்டு வரும் டெலிகிராம் தனது பயனர்களின் தகவல்களை எந்த மூன்றாம் தரப்புக்கும் தெரிவிப்பதில்லை என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறது. தொடங்கிய நாள்முதல் இதுவரையில் எந்த ஒரு தரப்புக்கும் தனது பயனர்களின் விவரங்களை பரிமாறிக் கொண்டதில்லை என்றும் டெலிகிராம் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் தொழில் நுட்ப வல்லுநர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு டெலிகிராம் இயங்குகிறது.

மிக அதிக அளவு கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள், காணொளிகள் (வீடியோ) ஆகியவற்றை டெலிகிராம் மூலம் பரிமாறிக் கொள்ள முடியும் என்பது இந்த செயலியின் மற்றொரு வசதியாகும்.

வாட்ஸ் எப் போலவே, மேசைக் கணினிகள் மூலமாகவும் டெலிகிராம் செயலியை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.