Home நாடு வாக்காளர் பட்டியல்: உலகின் மிக அதிக வயதுடைய மனிதர் சரவாக்கில் இருக்கிறாரா?

வாக்காளர் பட்டியல்: உலகின் மிக அதிக வயதுடைய மனிதர் சரவாக்கில் இருக்கிறாரா?

1022
0
SHARE
Ad

மிரி – சரவாக் மாநில வாக்காளர்களின் பட்டியலை நேற்று ஞாயிற்றுக்கிழமை,தேர்தல் ஆணையம் தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.

அதனைப் பார்வையிட்ட ஜசெக சோசலிச இளைஞர் பெட்ராஜெயா பொதுச்செயலாளரான அஜிஸ், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்.

காரணம், அப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களில் ஒருவரான முகமது சையட் பின் முகமது அர்சாத் முகமதுவின் அடையாள அட்டை எண், அவர் 1868-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்ததாகக் காட்டுகிறது.

#TamilSchoolmychoice

அப்படியானால், அந்த வாக்காளருக்குத் தற்போது 150 வயதாகிறது. அவர் மிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புஜுட் சட்டமன்றத்தில் அமைந்திருக்கும் குரோகோப் தொகுதியைச் சேர்ந்தவர் என அஜிஸ் கூறியிருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.

“இந்தத் தகவல் உண்மையென்றால், மலேசியா தற்போது 150 வயதான உலகின் மிக அதிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனையாளரைக் கொண்டிருக்கிறது,” என்று அஜிஸ் கூறியிருக்கிறார்.

மேலும், தேர்தல் ஆணையம் அந்நபரின் சுய விவரங்களைச் சரிபார்த்து, தங்களின் இணையதளத்தில் பதிவாகியுள்ள எண்ணையும் மறு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அஜிஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்போது உலகின் அதிக வயதான கின்னஸ் சாதனையாளராக, ஜப்பானைச் சேர்ந்த 117 வயதான நஜிப் தாஜிமா என்பவர் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.