Home கலை உலகம் வேலை நிறுத்தப் பிரச்சினைக்கு 3 நாட்களில் தீர்வு – விஷால் அறிவிப்பு!

வேலை நிறுத்தப் பிரச்சினைக்கு 3 நாட்களில் தீர்வு – விஷால் அறிவிப்பு!

993
0
SHARE
Ad

சென்னை – தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இன்னும் 3 நாட்களில் தீர்வு கிடைத்துவிடும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் நம்பிக்கையோடு தெரிவித்திருக்கிறார்.

திரையரங்குகளில் டிஜிட்டலில் படங்களைத் திரையிட கியூப் நிறுவனம் அதிக வசூல் செய்வதைக் கண்டித்து, கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இன்று வியாழக்கிழமை முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தின.

#TamilSchoolmychoice

அப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிம் பேசிய விஷால், “பேச்சுவார்த்தையை வைத்துப் பார்க்கும் தீர்வுக்கான சரியான பாதையில் செல்கிறது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் ஏன் இப்படி ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றனர். எனவே இன்னும் 3 நாட்களில் இதற்கான தீர்வு கிடைத்துவிடும் என நம்புகிறோம்” என்றார்.