Home நாடு சிலாங்கூர் அரசின் தொகுதிகள் எல்லை சீர்திருத்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது!

சிலாங்கூர் அரசின் தொகுதிகள் எல்லை சீர்திருத்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது!

1044
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தின் தொகுதிகள் எல்லை சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக சிலாங்கூர் அரசாங்கம் தாக்கல் செய்திருந்த மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை நிராகரித்தது.

நீதிபதி அகமடி அஸ்னாவி தலைமையிலான 3 பேர் அடங்கிய பெஞ்ச் இன்று அம்மனுவை விசாரணை செய்தது.

பின்னர் அகமடி அஸ்னாவி வெளியிட்ட தீர்ப்பில், மாநில அரசாங்கம் தீர்ப்பை மறுஆய்வு செய்ய சட்டப்பூர்வ நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. தொகுதி எல்லை சீர்திருத்தத்தின் போது, தேர்தல் ஆணையம் முதன்மை மற்றும் துணை வாக்காளர் பட்டியலையும் அல்லவா பயன்படுத்த வேண்டும், மாறாக முதன்மை வாக்காளர் பட்டியலில் மட்டுமே நம்பி இறங்குவது ஏன் என்ற கேள்வியில் அவர்கள் இருக்கிறார்கள். என்றாலும்  நீதிமன்றத்திற்கு மறு ஆய்வு செய்ய மற்றும் வாக்காளர் பட்டியல் குறித்து முடிவு செய்ய எந்த அதிகாரமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“எனவே, மாநில அரசாங்கத்தின் மேல்முறையீடு நிராகரிக்கப்படுகிறது” என்று இரண்டாவது நீதிபதி வெர்னான் ஆங் லாம் கியாட் தீர்ப்பை வாசித்தார்.