ஜோத்பூர் – கடந்த 1998-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அரிய வகை மான்கள் இரண்டை வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே, இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த நடிகர் சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்தரே ஆகியோரை ஜோத்பூர் நீதிமன்றம் விடுவித்தது.
கடந்த 20 ஆண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இக்குற்றத்திற்காக சல்மான் கானுக்கு 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரையில் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தண்டனை விபரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், சல்மான் கான் தரப்பில் மேல்முறையீடு செய்யவும், பிணையில் விடுவிக்கவும் மனு கொடுக்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.