Home நாடு பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னம் கிடையாது – ஜசெக அறிவிப்பு!

பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னம் கிடையாது – ஜசெக அறிவிப்பு!

956
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் போட்டியிடப்போவதில்லை என ஜசெக அறிவித்திருக்கிறது.

எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானின் பொதுவான சின்னத்தில் தாங்கள் போட்டியிடப்போவதாக ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

“நாங்கள் அனைவரும் சந்தித்துப் பேசி, பொதுவான சின்னத்தில் போட்டியிடலாம் என முடிவெடுத்திருக்கிறோம். ஒரு கட்சியாக அவ்வளவு எளிதில் இந்த முடிவை எடுத்துவிட முடியாது ஆனாலும் ஜசெக அதற்கு ஒப்புக் கொண்டு பொதுவான சின்னத்தைப் பயன்படுத்த முடிவெடுத்திருக்கிறது” என குவான் எங் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, நாளை வெள்ளிக்கிழமை பாசீர் கூடாங்கில் பக்காத்தான் ஹராப்பானின் பொதுவான சின்னத்தை அறிவிக்கப் போவதாக அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.